ராகுலைச் சந்தித்த வினேஷ் போகத், புனியா! ஹரியாணா தேர்தலில் போட்டியா?

மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.
பஜ்ரங் புனியா| ராகுல் காந்தி|  வினேஷ் போகத்
பஜ்ரங் புனியா| ராகுல் காந்தி| வினேஷ் போகத்படம்| காங்கிரஸ் எக்ஸ் தளப் பதிவு
Published on
Updated on
1 min read

மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.

ராகுலை சந்தித்த வினேஷ் போகத்

மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை புதன்கிழமை சந்தித்தனர்.

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுள்ளது.

வினேஷுக்கு வாய்ப்பா?

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி, ஒலிம்பிக் அமைப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்திருந்தது.

வருகின்ற ஹரியாணா தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பஜ்ரங் புனியாவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர வினேஷ் போகத்தும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவாதங்களுக்கு இடையே அவர் ராகுல் காந்தியை சந்தித்திருப்பது மேலும் பேசு பொருளாகியுள்ளது.

பஜ்ரங் புனியா| ராகுல் காந்தி|  வினேஷ் போகத்
சென்னையில் முதல் உலகளாவிய திறன் மையம்! முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்

ஹரியாணாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ராகவ் சதா, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஜ்ரங் புனியா| ராகுல் காந்தி|  வினேஷ் போகத்
சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

தீபக் பபாரியா பேச்சு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா கூறுகையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 66 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி சார்பில் 10 இடங்கள் கோரப்பட்டுள்ளன. 90 இடங்களில், 49 இடங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து நேற்றும் இன்றும் விவாதிக்கப்பட்டது. மேலும் உள்ள 41 இடங்களில் 32 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும், மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்படுவார்களா என்பது குறித்து, வியாழக்கிழமைக்குள் தெரிய வரும்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.