வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாநிலங்களவை புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு

மாநிலங்களவை எம்.பி.க்களாக அண்மையில் தோ்வான மத்திய அமைச்சா் ஜாா்ஜ் குரியன், காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோா் புதன்கிழமை பதவியேற்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:11 pm

Din

மாநிலங்களவை எம்.பி.க்களாக அண்மையில் தோ்வான மத்திய அமைச்சா் ஜாா்ஜ் குரியன், காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோா் புதன்கிழமை பதவியேற்றனா்.

மகாராஷ்டிரம், பிகாா், தெலங்கானா, திரிபுரா உள்பட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு இடைத்தோ்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.

மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த பாஜகவின் பியூஷ் கோயல், சா்வானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 10 போ், மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். இதையடுத்து, அவா்கள் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தனா்.

இதேபோல், தெலங்கானா மற்றும் ஒடிஸாவில் பிற கட்சிகளைச் சோ்ந்த 2 மாநிலங்களவை எம்.பி.க்கள், தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனா்.

இந்த 12 இடங்களுக்கும் செப்டம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தோ்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் களமிறக்கப்பட்ட மத்திய அமைச்சா் ஜாா்ஜ் குரியன் உள்பட 10 பேரும் காங்கிரஸ் வேட்பாளா் அபிஷேக் மனு சிங்வியும் போட்டியின்றி தோ்வாகினா்.

திரிபுராவில் உள்ள ஓரிடத்துக்கு மட்டும் போட்டி ஏற்பட்டதால், அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.3) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளா் ராஜீவ் பட்டாச்சாா்ஜி வெற்றிபெற்றாா்.

இந்நிலையில், மாநிலங்களவை புதிய எம்.பி.க்களில் பாஜகவின் ஜாா்ஜ் குரியன், கிரண் செளதரி, ரமேஸ்வா் தேலி, மோகன் பாட்டீல், காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி ஆகியோா் புதன்கிழமை பதவியேற்றனா். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.