மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.
அதனடிப்படையில், அதிமுகவுக்கான ஒரு இடத்தை பாமகவுக்கு அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை வருகைதந்த அன்புமணியை பாமக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன்மூலம் மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தம்பிதுரை வேட்புமனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Rajya Sabha elections: PMK Anbumani files nomination!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்பிக்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதவியேற்பு!

நீட் தேர்வில் விலக்கு; 5 லட்சம் பேருக்கு அரசு வேலை! பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!!
பாமக தேர்தல் அறிக்கை! அன்புமணி நாளை வெளியீடு!

பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதல் பட்டியலில் 3 பேர்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


