தெலங்கானாவில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை!

2026க்குள் இடதுசாரி தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும்
தெலங்கானாவில் நக்சல்கள் சுட்டுக்கொலை
தெலங்கானாவில் நக்சல்கள் சுட்டுக்கொலை
Published on
Updated on
1 min read

தெலங்கானாவில் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் காவல்துறையினருடன் நடந்த என்கவுண்டரில் 6 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர்.

காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்ட கண்காணிப்பாளர் ரோஹித் ராஜ் கூறுகையில்,

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் இன்று காலை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே என்கவுண்டர் நடந்தது.

முன்னதாக புதன்கிழமை, பாதுகாப்புப் படையினருடனான என்கவுண்டரில் கொல்லப்பட்ட 9 நக்சல்களின் உடல்கள் சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மாவட்ட மருத்துவமனையின் பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டன.

தெலங்கானாவில் நக்சல்கள் சுட்டுக்கொலை
ஆசிரியர் நாள்: பிரதமர், முதல்வர் வாழ்த்து!

செவ்வாய்க்கிழமை தண்டேவாடா-பிஜாப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர் 9 நக்சல்களையும் சுட்டுக் கொன்றனர்.

நக்சல்களிடம் இருந்து ஏராளமான எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், 303 ரைபிள்கள் மற்றும் 315 போர் ரைபிள்கள் கைப்பற்றப்பட்டதாக தண்டேவாடா எஸ்பி கௌரவ் ராய் தெரிவித்தார். நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

என்கவுண்டருக்குப் பிறகு, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் வீரர்களின் துணிச்சலைப் பாராட்டினார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்சல்களுடன் போராடுகிறது, விரைவில் அழிக்கப்படும் என்று கூறினார்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 2026க்குள் இடதுசாரி தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com