மும்பையில் வணிக வளாகத்தின் ஏழு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையின் லோயர் பேரல் பகுதியில் அமைந்துள்ள கமலா மில் வணிக வளாகத்தில் உள்ள ஏழு மாடிகளைக் கொண்ட டைம்ஸ் டவர் கட்டடத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகளவில் தீ பற்றியதால், எட்டு தீயணைப்பு இயந்திரங்களுடன் முயற்சி நடக்கும் நிலையில், இந்த விபத்தை பெரிய விபத்தாக தீயணைப்புப் படை அறிவித்துள்ளது.
இருப்பினும், இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.