அதானி விண்ணப்பத்தை நிராகரித்த கல்லூரி; சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவம்

அதானியின் விண்ணப்பத்தை நிராகரித்த மும்பை கல்லூரி 40 ஆண்டுகளுக்குப்பின் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவம் செய்தது.
கௌதம் அதானி - கோப்புப்படம்
கௌதம் அதானி - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மும்பையில் உள்ள ஒரு கல்லூரி, தொழிலதிபர் கௌதம் அதானியின் விண்ணப்பித்தை நிராகரித்துவிட்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் அதே கல்லூரி அதானியை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்துள்ளது.

மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர, அதானி விண்ணப்பித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டதால், அவர் படிப்பைத் தொடராமல், தொழில் தொடங்கினார். அவர் பல்வேறு தொழில்களை படிப்படியாக விரிவுபடுத்தி இன்று நாட்டின் மிகப்பெரிய பணக்காரராகவும், முன்னணி தொழிலதிபராகவும் மாறியிருக்கிறார்.

கல்லூரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்குப் பின், அதே கல்லூரியில் தற்போது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கௌதம் அதானி, தனது 16வது வயதில், மும்பைக்கு வந்து, வைரக் கற்களை வரிசைப்படுத்தும் பகுதிநேர தொழிலில் ஈடுபட்டார். அதேவேளையில், 1977 அல்லது 78ஆம் ஆண்டு மும்பையில் இருந்த ஜெய் ஹிந்த் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் விக்ரம் நன்கானி தெரிவித்தார். அவர் கல்லூரியில் உரையாற்றும் முன்பு, நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

கௌதம் அதானி - கோப்புப்படம்
இந்தியாவில் மீண்டும் போலியோவா? உலகெங்கும் ஒழிக்கப்பட்டது எவ்வாறு?

கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் இங்குதான் படித்தார். அதனால், அதானியும் இங்கு விண்ணப்பித்திருந்தார். நல்வாய்ப்பாக அல்லது துரதிருஷ்டமாக கல்லூரி நிர்வாகம், அதானியின் விண்ணப்பத்தை ஏற்கவில்லை. அதனால் அவர் முழு நேரம் தொழிலில் ஈடுபட்டார். பல்வேறு தொழில்களைக் கற்றுக்கொண்டார். அவர் இந்த கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்ததன் மூலம், அவரும் மிகச் சிறந்த முன்னாள் மாணவர்தான் என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

1998ஆம் ஆண்டு அவர் நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு அவருக்கு அனைத்துமே வளர்ச்சிதான். கடந்த 25 ஆண்டுகளில், அவர் துறைமுகங்கள், சுரங்கங்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, எரிவாயு, சிமெண்ட், ஊடகம் என தனது வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றும், தடைக்கற்களை உடைத்தெறிந்து, மாணவர்கள் வெற்றியை அடைய வேண்டும் என பேசிய விக்ரம், கௌதம் அதானி, அவருக்கான தடையை 16 வயதில் உடைத்தெறிந்திருக்கிறார் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com