ஹரியாணா தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

ஹரியாணா தேர்தலை முன்னிட்டு 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
vote
vote
Published on
Updated on
1 min read

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 9 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை ஆம் ஆத்மி செவ்வாக்கிழமை வெளியிட்டது.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்களன்று ஆம் ஆத்மி வெளியிட்டது.

இதனிடையே ஆம் ஆத்மி தனது இரண்டாவது பட்டியலில், ஹென்ரி, சதௌரா, தானேசர், ரதியா, அதம்பூர், பர்வாலா, டைகான், பரிதாபாத் மற்றும் பவால் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

vote
4 நாள்களாக ஒரே விலையில் தங்கம்: வெள்ளி விலை?

ஹவா சிங் ஹென்ரியிலும், பிரவேஷ் மேத்தா ஃபரிதாபாத்திலும் களமிறக்கப்பட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முழு பலத்துடன் போட்டியிடும். ஊழல் நிறைந்த பாஜக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள் என்று குப்தா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹரியாணா குற்றங்களின் தலைநகராக பாஜக மாறியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வேலையின்மை அதிகமாக உள்ளது. மக்கள் மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கியுள்ளன.

vote
சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம்! தீவிர சிகிச்சை

பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய செப்.12 கடைசி தேதியாகும். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலில் தில்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டன. பொதுத்தேர்தலில், ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு இடத்தை வழங்கியது, அதுவும் தோல்வியடைந்தது.

கடந்த 2019 ஹரியாணா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 46 இடங்களில் போட்டியிட்டது, ஆனால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com