
இணையப் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது: அமித் ஷா
இணையப் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இணையப் பாதுகாப்புக்கு எல்லையில்லை என்றும் அச்சுறுத்தலைச் சமளிக்க அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைவது அவசியமென்றும் அவர் கூறினார்.
இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தின் நிறுவனத் தின விழாவில் அமித் ஷா உரையாற்றினார். அவர் உரையில் கூறியதாவது,
இணையப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது என்பதால் இணையப் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் இணையப் பாதுகாப்புகளைச் சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்ப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இணையப் பாதுகாப்பு குறித்து முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உலகின் 46 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.
நாட்டில் சைபர் குற்றம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணத் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2018இல் உருவாக்கப்பட்டது, இது சட்ட அமலாக்க முகமைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் சைபர் கிரைம் தொடர்பான பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.