ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றக் காவல்!

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை செப். 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படும் சந்தீப் கோஷ்- PTI
Updated On :10 செப்டம்பர் 2024, 11:42 am

DIN

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை செப். 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

இதையடுத்து, மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னர் விசாரணையில், மருத்துவமனையில் நியமனங்களில் ஊழல், நிதி முறைகேட்டில் கடந்த செப். 2ல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சிபிஐ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கின் விசாரணையில், சந்தீப் கோஷ் மற்றும் மூவருக்கு செப். 23 வரை நீதிமன்றக் காவல் அளித்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கும் இந்த நிதி முறைகேட்டுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணை தேவைப்பட்டால் சந்தீப் கோஷின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படலாம் என்று சிபிஐ கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.