
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை ஆம் ஆத்மி புதன்கிழமை வெளியிட்டது.
காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்களன்று ஆம் ஆத்மி வெளியிட்டது.
இதனிடையே ஆம் ஆத்மி தனது இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதையடுத்து 11 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது.
மூன்றாவது வேட்பாளர் பட்டியலில் ராடௌர் தொகுதியில் பீம் சிங் ரதி, அமர் சிங் (நிலோகேரி), அமித் குமார்(இஸ்ரானா), ராஜேஷ் சரோஹா(ராய்), மஞ்சீத் ஃபர்மானா(கர்கௌடா), பிரவின் குஸ்கானி (கார்ஹி சாம்ப்லா-கிலோய்) ஆகிய தொகுதிகளில் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. நரேஷ் பக்ரி (கலனூர்), மகேந்தர் தஹியா (ஜஜ்ஜார்), சுனீல் ராவ் (அடேலி), சதீஷ் யாதவ் (ரேவாரி), மற்றும் கர்னல் ராஜேந்திர ராவத் (ஹாதின்) ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தனது இரண்டாவது பட்டியலில், சதௌராவில் இருந்து ரிது பமானியா, தானேசரில் இருந்து கிரிஷன் பஜாஜ், இந்திரில் இருந்து ஹவா சிங், ரதியாவில் முக்தியார் சிங் பாசிகர் மற்றும் ஆதம்பூரிலிருந்து பூபேந்திர பெனிவால் உள்ளிட்ட 9 வேட்பாளர்களை களமிறக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.