
ஒரு குழந்தை அல்லது விலங்குகளின் பாலினத்தை முடிவு செய்வது, ஆணிடமிருந்து வரும் ஒய் குரோமோசோம்தான். ஆனால், மனித இனத்தில் ஆண்களிடையே ஒய் குரோமோசோம்கள் குறைந்து வருவதாகவும், நாளடைவில் இல்லாமலே போகலாம் எனவும் புதிதாக ஒரு மரபணுவை மனித குலம் கண்டுபிடிக்காவிட்டால், ஆண் இனமே அழிந்துவிடும் என்றும் சில ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இரண்டு எலி இனங்கள் ஏற்கனவே ஒய் குரோமோசோம்களை இழந்து, இந்த ஆய்வுக் கதையை நிரூபித்துள்ளது. மேலும், இன்னமும் அந்த இனம் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது. அவை எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன.
தேசிய அறிவியல் அகாதமியின் ஆய்வுக் கட்டுரையில், இந்த சின்னஞ்சிறு எலிகளில் எவ்வாறு புதிய ஆண் குரோமோசோம்கள் உருவாகின என்பதும் ஆராயப்பட்டு வருகின்றன.
மனித இனத்திலிருந்து ஒய் குரோமோசோம்கள் குறைவது எப்படி?
மனித மற்றும் இதர விலங்கு இனத்தில், பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் இருக்கும், ஆண்களுக்கு ஒரு எக்ஸ் குரோமோசோம் மற்றும் ஒரு ஒய் குரோமோசோம் இருக்கும். ஆனால், இந்த குரோமோசோம்களுக்கும், இதன் வடிவத்துக்கும் உண்மையில் எந்த தொடர்பும் இல்லை. எக்ஸ் என்பது உண்மையில் வடிவம் தெரியாத ஒரு குரோமோசோம் எனக் கொள்ளலாம்.
எக்ஸ் குரோமோசோம், பாலினத்துடன் தொடர்பில்லாத அனைத்து வகையான வேலைகளையும் செய்யும் சுமார் 900 மரபணுக்களைக் கொண்டிருக்கும். ஆனால் ஒய் குரோமோசோம் என்பது, சில மரபணுக்கள் (சுமார் 55) மற்றும் குறியீடுகளைக் கொண்டிராத நிறைய டிஎன்ஏ - எதையும் செய்யாத டிஎன்ஏவைக் கொண்டிருக்கும்.
ஆனால் ஒய் குரோமோசோம், ஒரு கோப்பாக பேக் செய்கிறது, ஏனெனில் அதில்தான் அனைத்து முக்கியமான மரபணுக்களும் உள்ளன, இதுதான் பெண்ணின் கருப்பையில் சென்று ஆண் கருவின் வளர்ச்சியைத் தொடங்குகிறது. கருத்தரித்த பிறகு சுமார் 12 வாரங்களில், இந்த முதன்மை மரபணு, கருவின் விந்தணு மற்றும் ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பையின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது. அதன் மூலம், கருப்பையில் உருவாகும் ஒரு கரு ஆண் குழந்தையாக வளர்ச்சியடைகிறது.
மனித இனத்தைப் போலவே இதர விலங்குகளுக்கம் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் இருக்கும். எக்ஸ் ஏராளமான மரபணுக்களுடனும், ஒய் குரோமோசோம், எஸ்ஆர்ஒய் மற்றும் இதர மரபணுக்களுடன் இருக்கும். ஆனால், ஆண்கள் மற்றும் பெண்களிடையே எக்ஸ் மரபணுக்கள் சம அளவு இல்லாததால் இந்த அமைப்பில் சிக்கல்கள் ஏற்படுகிறது.
இப்படி ஒரு வித்தியாசமான அமைப்பு எப்படி உருவானது? இது தொடர்பான ஆச்சரியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியாவின் பிளாட்டிபஸ், பறவைகளைப் போலவே முற்றிலும் மாறுபட்ட பாலின குரோமோசோம்களைக் கொண்டுள்ளது.
பிளாட்டிபஸில், எக்ஸ், ஒய் இரண்டு குரோமோசோம்களைக் கொண்ட ஒரு சாதாரண குரோமோசோம் இருக்கும். எனவே ஆண், பெண் என இரண்டும் சமம்தான். ஆனால், இவை பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு இருந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபோல, மனிதர்களும் பிளாட்டிபஸ் போல தனித்தனியாக குரோசோம்சோம்கள் உருவாகி, 166 மில்லியன் ஆண்டுகளில் ஒய் குரோமோசோம் 900-55 செயலில் உள்ள மரபணுக்களை இழந்துவிட்டது என்றால், ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு சுமார் ஐந்து மரபணுக்களின் இழப்பு நேரிட்டிருக்கிறது என்று அர்த்தமாகிறது, இந்த விகிதத்தில் கணக்கெடுத்தால், கடைசி 55 மரபணுக்கள் 11 மில்லியன் ஆண்டுகளில் இல்லாமல் போகலாம் என்கிறது ஆய்வுகள்.
பிறகு என்ன நடக்கும்?
மனித இனத்தில், ஒய் குரோமோசோம்கள் இல்லாமல் - பரிணாம ரீதியாக - அழிந்து போகலாம் என்ற ஆய்வு மனித குலத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஊகங்களை அதிகரித்திருக்கிறது.
மனித இனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மற்றும் விந்தணு இல்லாமல் குழந்தைப் பேறு நடக்காது, இதனால், மனித இனமே அழிந்துபோகலாம், அல்லது புதிய கண்டுபிடிப்பு சொல்வது போல, மனிதர்களிடையே ஒரு புதிய மாற்றம் உருவாக்கப்பட்டு புதிய பாலினத்தை நிர்ணயிக்கும் மரபணுவை ஆய்வுகள் மூலம் உருவாக்கலாம் என்றெல்லாம் கூறப்படுகிறது.
ஆனால், இதெல்லாம் சாத்தியமா என்பது, யாராவது ஒருவர், சுமார் 11 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வந்துப் பார்த்தால்தான் தெரியும். அப்போது பூமியில் மனிதர்களே இருக்க மாட்டார்களா? அல்லது பல வகைப்பட்ட மனித இனங்கள் இருக்குமா? என்பது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.