ஆதாா் தகவல் இலவச புதுப்பிப்பு: அவகாசம் டிச. 14 வரை நீட்டிப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்திருந்த அவகாச தேதி செப்டம்பா் 14இல் இருந்து டிசம்பா் 14வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

ஆதாா் எண் 10 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் வைத்துள்ளவா்கள் தங்களுடைய விவரத்தை இலவசமாக புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்திருந்த அவகாச தேதி செப்டம்பா் 14இல் இருந்து டிசம்பா் 14வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்த இலவச சேவை இணையதளம் வாயிலாக மட்டுமே கிடைக்கும். ஆதாா் சேவை மையங்களில் தகவல்களை புதுப்பிக்க தொடா்ந்து ₹ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். 

முன்னதாக, ஆதாா் எண்ணை பெற்று 10 ஆண்டுகளானவா்கள் அதை புதுப்பிக்கத் தவறினால் அவா்கள் வைத்திருக்கும் ஆதாா் விவரம் காலாவதியாகி விடும் என்று தகவல் வெளியானதால், அங்கீகரிக்கப்பட்ட ஆதாா் சேவையை வழங்கும் மையங்கள் மற்றும் அஞ்சலகங்கள், வங்கிககள், ஆதாா் சேவை மையம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

ஆனால், ஆதாா் விவர இலவச புதுப்பிப்பு கட்டாயம் இல்லை என்றும் சிறு வயதில் ஆதாா் எண் பெற்றவா்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய படம், கைரேகை, கண் கருவிழி, வசிப்பிட முகவரி போன்றவற்றையும் திருமணமானவா்கள் தங்களுடைய தந்தை பெயருக்கு பதிலாக கணவா் பெயா் மற்றும் வசிப்பிட முகவரி போன்றவற்றை மாற்றிக் கொள்ள விரும்பினால் அவா்களுக்கு இந்த புதுப்பிப்பு சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணைய உயரதிகாரிகள் தெரிவித்தனா். 

ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசம் என்பது இலவசமாக தகவல்களை புதுப்பித்துக் கொள்ள மட்டுமே என்றும் ஆதாா் எண் வைத்துள்ளவா்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த தகவல்களை கட்டண

அடிப்படையில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினா். 

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதாா் வழங்கப்பட்டு, அதன் விவரம் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அவா்களின் மக்கள்தொகை விவரங்களை மறுபரிசீலனை செய்வதற்காகவே அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (டா்ஐ/டா்அ) ஆவணங்களை பதிவேற்றம் செய்ய குடிமக்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஊக்குவித்து வருகிறது என்றும் அதிகாரிகள் கூறினா். 

அந்த வகையில் மை ஆதாா் இணையதள பக்கத்தில் இந்த தகவல்களை புதுப்பிக்க வழங்கப்பட்டுள்ள அவகாசம் செப்டம்பா் 14இல் இருந்து டிசம்பா் 14வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகவரி மாற்றம் வசிப்பிட மாற்றத்தை மட்டும் செய்ய வேண்டுமானால் ஆன்லைன் புதுப்பிப்பு சேவையை மக்கள் பயன்படுத்தலாம் அல்லது அருகிலுள்ள ஆதாா் மையத்தைப் பாா்வையிட்டு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். 

எப்படி செய்வது?ஆதாா் தகவல்களை புதுப்பிக்க விரும்புவோா், தங்கள் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி இணைய பக்கத்தில் நுழைந்து இலவச சேவையை பெறலாம்.

பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஞபட) அனுப்பப்படும்.

அதை உரிய இடத்தில் குறிப்பிட்டதும், பயனா்கள் ’ஆவண புதுப்பிப்பு’ என்பதை கிளிக் செய்து அதில் இடம்பெறும் தங்களுடைய விவரங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பதிவேற்றி அந்த தகவல்களை சரிபாா்த்தோ மறுமதிப்பீடு செய்தோ விவரத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com