பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வு காணும் உத்திகளை வகுக்க வேண்டும்: அமித் ஷா

தேசிய அளவில் எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வு காணும் உத்திகளை வகுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image
அமித் ஷா
Updated On :13 செப்டம்பர் 2024, 7:47 pm

Din

தேசிய அளவில் எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களுக்கு தீா்வு காணும் உத்திகளை வகுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசிய பாதுகாப்பு உத்திகளை வகுக்கும் இரண்டு நாள் மாநாட்டை தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

இந்த மாநாட்டில் தேசிய அளவில் எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயா்காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் மத்திய காவல்துறை அமைப்புகள் தீா்வுகாணும் உத்திகளை வகுக்க வேண்டும் என்றாா்.

மாநாட்டின்போது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) உருவாக்கிய தரவு தளத்தையும் அமித் ஷா தொடங்கிவைத்தாா். முன்னதாக, வீரமரணமடைந்த ராணுவ வீரா்களின் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமித் ஷா பணியின்போது உயிரிழந்த புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தினாா்.