மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சூன்யம் வைப்பதாக சந்தேகித்து 2 பெண்கள் அடித்துக் கொலை!

சந்தேகத்தின்பேரில் இரு பெண்களை கிராம மக்கள் அடித்தேக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 11:46 am

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் சூன்யம் வைப்பதாக சந்தேகத்தின்பேரில் பெண்கள் இருவரை கிராம மக்கள் அடித்தேக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயூரேஸ்வர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஹரிசரா கிராமத்திற்கு அருகில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் இரண்டு பழங்குடியின பெண்களின் உடல்களை போலீஸார் கண்டெடுத்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இறந்தவர்கள் லாட்கி கிஸ்கு மற்றும் டோலி சோரன் என்று அடையாளம் காணப்பட்டனர்.

இதுதொடர்பாக இறந்த லாட்கி கிஸ்குவின் மகள் ராணி கிஸ்கு கூறுகையில்,

எனது உறவினர்களும் மற்றும் கிராம மக்களும் எனது தாயை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கினர். எனது சகோதரர்கள் இருவரும் வெளியில் தான் இருந்தனர். ஆனால் என் தாயை பாதுகாக்க முடியவில்லை என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், சூன்யம் வைத்ததாக சந்தேகித்து இரு பெண்களையும் கிராம மக்கள் அடித்துக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸ் குழுவினர் கிராமத்திற்கு வந்து சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை கைது செய்துள்ளதாக காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த பெண்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.