
நர்மதா நதிக்கரையில் உள்ள புனித நகரங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ள பகுதிகளில் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறியுள்ளார்.
நர்மதா நதி குறித்த செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் மத்திய பிரதேசத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர்,
'நர்மதா நதியின் பிறப்பிடமான அமர்கண்டக், அந்த நகர நிர்வாகத்தின் மூலமாக நிர்வகிக்கப்பட வேண்டும். அப்பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
நர்மதா நதிக்கு மிகவும் தொலைவில் ஒரு செயற்கைகோள் நகரம் உருவாக்கப்பட வேண்டும். நதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் முதல் மாநில எல்லைகள் வரை, யாரும் கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது.
திடக்கழிவு மேலாண்மைக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, செயற்கைக்கோள், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் நர்மதா நதியைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும்.
நர்மதை நதியை ஒட்டியுள்ள புனித நகரங்களிலும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இறைச்சி, மதுபானங்கள் உட்கொள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஆற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.