
தில்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை, நாளை மாலை 4.30 மணியளவில் அரவிந்த் கேஜரிவால் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தனது முதல்வர் பதவியின் ராஜிநாமா கடிதத்தை வழங்குவார் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பு, அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில், நாளை காலை 11.30 மணியளவில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுவும் பங்கேற்கிறது.
இந்தக் கூட்டத்தில் தில்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு மாலையில் ஆளுநரை கேஜரிவால் சந்திக்கவுள்ளார்.
தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் நேற்று (செப். 16) அறிவித்திருந்தார். மேலும் துணை முதல்வர் பதவியை மனீஷ் சிசோடியா ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கலந்தாலோசித்து, இரு தினங்களுக்குள் புதிய முதல்வர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் நாளை (செப். 17) காலை 11.30 மணியளவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் தில்லியின் அடுத்த முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சந்திக்க அரவிந்த் கேஜரிவால் அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில் நாளை மாலை 4.30 மணிக்கு கேஜரிவாலை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.