சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மமதா மீது மருத்துவர்களுக்கு நம்பிக்கையில்லை: பாஜக

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி மீது நம்பிக்கையில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

News image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்... - பிடிஐ

Updated On :16 செப்டம்பர் 2024, 9:43 pm IST

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி மீது நம்பிக்கையில்லை என பாஜக விமர்சித்துள்ளது.

பேச்சுவார்த்தையை நேரலை செய்ய மருத்துவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதனை ஏற்க மமதா தலைமையிலான அரசு மறுப்பதாகவும், அதற்கு பதிலாக சுருக்கெழுத்து தட்டச்சரை நியமித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கடந்த மாதம் 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவிலுள்ள இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ மாணவியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இளநிலை மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை மமதா பானர்ஜி கோரிக்கை வைத்தார். முதல்வரின் இந்த கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டும், 30க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மமதா அரசு ஏற்க மறுப்பதால் மருத்துவர்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மமதா பானர்ஜியின் இன்றைய கோரிக்கையையும் இளநிலை மருத்துவர்கள் போராட்டக் குழு ஏற்க மறுத்தது.

இந்நிலையில், இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் மிதுன் சர்க்ரவர்த்தி பேசியதாவது, மருத்துவர்களை மூளைச்சலவை செய்ய மமதா பானர்ஜி முயற்சிக்கிறார். மருத்துவர்களின் போராட்டத்தில் நானும் ஒரு பகுதியாக பங்கேற்றுள்ளேன். இந்தப் போராட்டம் நீதி கிடைக்காமல் ஓயாது. பாதியில் கைவிடப்படும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், அது நடக்காது எனக் குறிப்பிட்டார் மிது.

இதேபோன்று பாஜகவின் மற்றொரு தலைவரான சுகந்த மஜும்தர் பேசியதாவது, மாநில அரசு சார்பில், இளநிலை மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பேச்சுவார்த்தையை நேரலை செய்ய முன்வராமல், மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தை சாத்தியமில்லை. நேரலைக்கு பதிலான சுருக்கெழுத்து தட்டச்சரை நியமிக்கின்றனர். இதனால், மமதா பானர்ஜி மீது மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதில் தீர்வு காணப்பட்டால் அது மிகவும் நல்லது. ஆனால், இந்த போராட்டம் பாதியில் நிற்க பாஜக விடாது. முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டும். இப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் அவர் எனப் பேசினார் மஜும்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.