ஹரியாணாவில் பெண்களுக்கு ரூ.2,000 ஊக்கத் தொகை: காங். தேர்தல் அறிக்கை!
ஹரியாணா தேர்தல்: வாக்காளர்களைக் கவருமா காங்கிரஸின் 7 வாக்குறுதிகள்!


ஹரியாணா பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று(செப்.18) வெளியிடப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது.
தோ்தல் பிரசாரம் உச்சத்தில் உள்ள நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான 7 வாக்குறுதிகள்:
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம்
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு
மகளிர் மேம்பாடு
சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்
இளையோருக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்வது
குடும்பங்கள் நலன் காப்பது
ஏழைகளுக்கு வீடு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது, “மேற்கண்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.
மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒருபகுதியாக, சமையல் எரிவாயு உருளை ரூ. 500-க்கு வழங்கப்படும்.
18 - 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 6,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்
ரூ. 25 லட்சம் வரையிலான சிகிச்சை செலவை அரசே ஏற்று இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வசதி அமல்படுத்தப்படும்
என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...