லட்டு கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்: ராகுல் காந்தி!

லட்டு கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
rahul gandhi
ராகுல் காந்தி (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

லட்டு கலப்பட விவகாரம் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள்கூட கலந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது நாட்டில் உள்ள மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் 300-வது விக்கெட்டை வீழ்த்த நல்ல வாய்ப்பு: ஜடேஜா

அந்தப் பதிவில், “திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன.

திருப்பதியில் உள்ள கடவுள் பாலாஜி இந்தியாவிலும், உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பத்திற்குரிய தெய்வமாக இருக்கிறார். இந்தக் கலப்பட பிரச்னை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்.

இந்த விவகாரம் முழுமையாக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகள் நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்கொடைகளால் கோடிகளில் புரளும் மும்பை லால்பாக்சா ராஜ விநாயகர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com