அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

நன்கொடைகளால் கோடிகளில் புரளும் மும்பை லால்பாக்சா ராஜ விநாயகர்!

மும்பை லால்பாக்சா ராஜ விநாயகருக்கு கிடைத்த நன்கொடைகள் பற்றி...

News image

மும்பை லால்பாக்சா ராஜ விநாயகர்

Updated On :20 செப்டம்பர் 2024, 7:55 pm IST

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விதவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் பத்து நாள்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பாக லால்பாக்சா ராஜ விநாயகருக்கு ரூ.5.65 கோடி, 70 கிலோ தங்கம்-வெள்ளிப் பொருள்கள் 10 நாள்களில் நன்கொடை குவிந்துள்ளது.

மும்பை முழுவதும் விநாயகர் கோயில்களிலும், பொது இடங்களிலும் மிகப்பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பத்து நாள்களும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜ விநாயகர் உற்சவம் மிகவும் புகழ்பெற்றது. விழாத் தொடங்கிய முதல் நாளில் மட்டும் பக்தர்கள், ரூ.48 லட்சத்தை நன்கொடையாக அளித்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில் 17ஆம் தேதி ஆனந்த சதுர்தசியன்று விழா நிறைவடைந்தது. மும்பையில் மட்டும் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறைவு விழாவில் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இந்த நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜ விநாயகருக்கு விழாவின் பத்து நாள்களும் நன்கொடைகள் குவிந்தன.

இதுவரையிலும், ரொக்கமாக சுமார் ரூ. 5.65 கோடியும், 4.15 கிலோ தங்கப் பொருள்களும், 64.32 கிலோ வெள்ளிப்பொருள்களும் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் 20 கிலோ தங்கத்திலான கிரீடம் ஒன்றையும் லால்பாக்சா விநாயகருக்கு நன்கொடையாக அளித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.