திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.. மகாபாவம்: முன்னாள் தலைமை அர்ச்சகர்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்த்து மகாபாவம் செய்துவிட்டார்கள்..
முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணா
முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணா
Published on
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையானுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டியில் விலங்கு கொழுப்பு கலந்து மகா பாவம் செய்துவிட்டதாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயிலில் பெருமாளுக்கு படைக்கப்படும் லட்டு பிரசாதம், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. கோயிலில் அமைந்திருக்கும் சமையலறையில் மிகவும் பாதுகாப்பான முறையில் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமான முறையில், நெய், கற்கண்டு, அரிசி மாவு, கடலை மாவு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் ஒரே சீரான அளவில் கலந்து தயாரிக்கப்படும் லட்டு உலக மகா பிரசித்தி பெற்றதாகும்.

இந்த நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது எழுந்துவரும் சர்ச்சை மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சை..

கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தில நெய் வாங்குவது நிறுத்தப்பட்டு, கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடமிருந்து நெய் வாங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தகவலால் தற்போது இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜூலை 23-ம் தேதி லட்டு சுவையில் மாற்றம் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, ஆளிவிரை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள் கூட லட்டில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமண தீட்சதலு கூறுகையில்.

பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசும் நெய்யில் அதிக கலப்படம் இருந்ததாகவும், தரம் குறைவாக இருந்ததை நான் பல வருடங்களுக்கு முன்னரே கவனித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுப்பற்றி தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கோயில் அறக்கட்டளையின் தலைவர்களிடம் முன்வைத்தேன். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

தற்போது புதிய அரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த அரசு அனைத்து குழப்பங்களையும் நீக்குவதாக உறுதியளித்துள்ளனர். ஆட்சியில் உள்ள அரசு பால் பண்ணைகளிலிருந்து சுத்தமான பசும் நெய்யை வாங்கி சுத்தமான உணவுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றது.

ஆனால், திருப்பதியில் கடந்த 5 ஆண்டுகளால் தயாரிக்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு மற்றும் மீண் எண்ணெய் கலந்து மகா பாவம் செய்துவிட்டார்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையும் பக்தியும் கொண்ட புண்ணியக் கோயிலில் இதுபோன்ற மகா பாவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com