ரூ.2 லட்சத்துக்கு போலீஸ் வேலை: ஐபிஎஸ் சீருடையில் சுற்றிய சிறுவன் கைது!

ரூ.2 லட்சத்துக்கு போலீஸ் வேலை கொடுப்பதாக சொன்னவரிடம் பணம்கொடுத்து ஏமாந்த சிறுவன் கைது!
சிறுவன் கைது
சிறுவன் கைது
Published on
Updated on
1 min read

ரூ.2 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம், சமோசா விற்றப் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சிறுவன், ஐபிஎஸ் சீருடையில் கையில் துப்பாக்கியுடன் சுற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சமோசா போன்ற தின்பண்டங்களை விற்பனை செய்து வந்த சிறுவன், தான் விரைவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகப்போகிறேன் என்று சொல்லி வந்ததில் யாரும் ஆச்சரியப்படவில்லை. ஏதே விளையாட்டாக சொல்கிறார் என்றுதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால், பிகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில், உள்ள சிறிய கிராமத்தில், 18 வயதே அந்த அந்த சிறுவன், ஐபிஎஸ் அதிகாரியின் உடையில், கையில் துப்பாக்கியுடன் ரோந்து வந்தபோது பலரும் மிரண்டேவிட்டிருப்பார்கள். சிலர் விவரம் அறிந்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் அவரைக் கைது செய்த போதுகூட, சிறுவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மனோஜ் சிங் என்பவர், தன்னிடம் 2 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, மிதிலேஷ், சமோசா விற்று சம்பாதித்தப் பணத்தை அவரிடம் சிறுக சிறுக கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான், தனக்கு மனோஜ் சிங் சீருடையும் துப்பாக்கியும் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.இன்னமும் 30 ஆயிரம் பாக்கி இருப்பதாகவும், அதனைக் கொடுப்பதற்குள் காவல்துறையினர் கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

போலி ஐபிஎஸ் அதிகாரி, காவல்நிலையத்துக்குள் அழைத்து வரும் விடியோ வைரலாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X