ரஷிய-உக்ரைன் போருக்கு விரைவில் தீா்வு: ஸெலென்ஸ்கியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்
ரஷிய-உக்ரைன் போரால் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் விரைவில் தீா்வு காண வேண்டும் எனவும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.










