பிரதமர் மோடி
பிரதமர் மோடி

"தற்சார்பு இந்தியா' திட்டத்தால் ஏற்றுமதி அதிகரிப்பு: பிரதமர் மோடி

நாட்டில் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார ரீதியாக இந்தியா வலுவடைந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
Published on

பாஜக ஆட்சியில் "தற்சார்பு இந்தியா' திட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து, இந்தத் திட்டத்தால் நாட்டில் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார ரீதியாக இந்தியா வலுவடைந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை கூறியிருப்பதாவது: "தற்சார்பு இந்தியா' திட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுற்றதையொட்டி, இந்தத் திட்டம் வெற்றி பெற கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.

நாட்டின் 140 கோடி மக்களும் தேசத்தை உற்பத்தி, கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றியமைத்துள்ளனர். இதன்மூலம் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது,. திறன்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனால், தேசத்தின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது.

அனைத்து வழிகளிலும் "தற்சார்பு இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் பணியை அரசு செய்து வருகிறது. சீர்திருத்த நடவடிக்கைகளில் நாட்டின் முயற்சிகள் தொடரும். இதுபோல ஆத்மநிர்பார், விக்ஷித் பாரத் திட்டத்தையும் நாம் கட்டமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com