சட்டப்பேரவை வளாகத்தில் வல்லுறவு! பாஜக எம்எல்ஏ மீதான எஃப்.ஐ.ஆர். விவரம்

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி...
சித்திரப் படம்
சித்திரப் படம்TNIE
Published on
Updated on
1 min read

கர்நாடக பாஜக பாஜக எம்எல்ஏ முனிரத்னா, சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு அரசு வழங்கிய காரில் வைத்தும் வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தை சுத்தம் செய்யும் பரிகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் காவலில் எம்எல்ஏ

கொலை மிரட்டல், ஜாதியை சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜூ அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், பெங்களூரு தெற்கு மாவட்டம், ராமநகரம் அருகே கக்கலிபுரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தன்னைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக 40 வயது பெண் செப்.18ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏ முனிரத்னா (60) உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் செளமியா லதா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது.

சிறையில் இருந்த முனிரத்னாவை மீண்டும் கைது செய்த சிறப்பு விசாரணைக் குழு, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது.

சட்டப்பேரவைக்குள் வல்லுறவு

கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள முனிரத்னாவின் அலுவலகத்தில் வைத்தும், அரசு காரில் வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், விடியோ கால் செய்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ள நிலையில், முனிரத்னாவில் செல்போனை கைப்பற்றி சைபர் பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் எழுப்பியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முனிரத்னா விசாரணையில் மறுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com