பாஜகவில் உள்கட்சி பூசல் இல்லை: ஹரியாணா முதல்வர்!

ஹரியாணாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்..
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி
Published on
Updated on
1 min read

ஹரியாணாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் ஹரியாணா சங்கல்ப யாத்திரையின் இரண்டாம் கட்டத்திற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியதோடு, இது அரசியல் சுற்றுலா என்றும் முதல்வர் சைனி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்த மூத்த தலைவரும் இதுவரை ஹரியாணாவில் பிரசாரம் செய்யவில்லை. தற்போது காந்தி அரசியல் சுற்றுலாவில் களமிறங்கியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் மாநிலத்தில் நாங்கள் செய்த வளர்ச்சியைப் பார்த்து அவர் வரவேற்கப்படுகிறார். இருப்பினும் பூபேந்தர் ஹூடாவின் ஆட்சிக் காலத்தில் பரவலாக இருந்த வாக்காளர்களிடமிருந்து அவர் கேள்விகளை எதிர்கொள்வார்.

ஹரியாணா தேர்தல் பிரசாரத்தின் இரண்டாம் கட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரேன்கர் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பாஜகவில் உள்கட்சி பூசல் இல்லை, கோஷ்டி பூசல் இல்லை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இது ஒரு ஜனநாயக கட்சி, யார் வேண்டுமானாலும் தங்கள் கோரிக்கையை எழுப்பலாம். பாஜவில் எந்த சண்டையும் இல்லை, இனிமேலும் எந்த சண்டையும் இருக்காது.

வாக்காளர்களிடையே எந்த குழப்பமும் இல்லை. பாஜகவிற்கு வாக்களிப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். நாங்கள் மாநிலத்தில் அபார வெற்றியைப் பெறுவோம். நான் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

மார்ச் மாதம் முதல்வராகப் பதவியேற்ற சைனி, லட்வா தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜகவில் பிளவு இல்லை ஆனால் காங்கிரஸில் பிளவு ஏற்படுவது நிச்சயம். அவர்களால் மூத்த தலைவர்களுக்குக் கூட மதிப்பளிக்க முடியாது. அப்படி இருக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டும் எப்படி நிறைவேற்றப்போகிறார்கள். ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com