சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரி மூலம் மிரட்டுகிறது பாஜக: காங்கிரஸ்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவரான பிரனவ் ஜா இன்று (பிப். 4) தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய முதல்வராக சம்பயி சோரன் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து சம்பயி சோரன் தலைமையிலான அரசு மீது விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெலங்கானாவிலுள்ள தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
இதனிடையே இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் பிரனவ் ஜா, ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. பெரும்பான்மையை விட அதிக பலம் பெற்றுள்ளோம். பாஜக எங்களை உடைக்கப் பார்க்கிறது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை மூலம் அச்சுறுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.