கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்றத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் மக்களவையில் உரையாற்றவுள்ளார்.

தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் பிப்.9-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதமரின் உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com