மாமாவின் வீடு: மக்கள் மனங்களைக் கொள்ளையடித்த முன்னாள் முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் நீண்ட கால முதல்வர் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டிருந்தவர் ஷிவ்ராஜ் சிங் சௌகான்.
மாமாவின் வீடு: மக்கள் மனங்களைக் கொள்ளையடித்த முன்னாள் முதல்வர்


மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் நீண்ட கால முதல்வர் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டிருந்தவர் ஷிவ்ராஜ் சிங் சௌகான். இவர் முன்னாள் முதல்வரான நிலையிலும் கூட, நாள்தோறும் நாளிதழ்களில் இவர் பெயர் தவறாமல் வந்துவிடுகிறது.

மாநில மக்கள் தன்னை மறந்துவிடாமல் இருக்கும் வகையில் இவர் பல்வேறு நெகிழ்ச்சியான செயல்களை செய்துவருகிறார்.

மாநில முதல்வருக்கு வழங்கப்படும் குடியிருப்பை கடந்த வாரம் காலி செய்திருந்த சிவ்ராஜ் சிங் சௌகான், போபாலில் உள்ள ஒரு புதிய வீட்டுக்குக் குடியேறியிருக்கிறார். இந்த வீட்டுக்கு நேற்று ஒரு பெயரிட்டுள்ளார். அதாவது, மாமாவின் வீடு என்பதே அது. பொதுவாக அன்னை இல்லம் என்று கேட்டிருப்போம். ஆனால், அது என்ன மாமாவின் வீடு என்றால்.. மத்திய பிரதேச மக்கள் மனதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில், மாமாவின் வீடு என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக தாயின் சகோதரர்தான் மாமா என அழைக்கப்படுவார். அந்த வகையில், மத்தியப் பிரதேச பெண்களுக்கு மாமாவின் வீடு என்று பெயரிட்டிருப்பதன் மூலம், அவர்களை உணர்வுப்பூர்வமாக நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார் சௌகான்.

இதன்பிறக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், எனது முகவரிதான் மாறியிருக்கிறது. அனால், மாமாவின் இல்லம் எப்போதும் மாவின் இல்லம்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனது சகோதரிகள், உடன்பிறந்தவர்கள், சகோதர்கள் என அனைவருக்கும் எனது அன்பு, நம்பிக்கை, ஒற்றுமை எப்போதும் இருக்கும். அவர்களுக்காக எப்போதும் என் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும். எப்போது என் நினைவு வந்தாலும், உடனே தயங்காமல் என் வீட்டுக்கு வாருங்கள்.  ஏனென்றால், இது உங்கள் தாய்மாமன் வீடு, உங்கள் சகோதரன் வீடு என்று பதிவிட்டுள்ளார்.

சில நேரங்களில், மகுடம் சூடும் விழா நடைபெறும்போது, சிலர் வனவாசம் நெல்வதும் நேரிடும். ஆனால் அவை அனைத்துமே ஒரு சில நோக்கங்களை நிறைவற்றத்தான் என்றும் சிவ்ராஜ் சிங் கூறியிருந்தது தலைப்புச் செய்தியாகியிருந்தது.

மேலும், அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும், கவலைப் படாதீர்கள், எனது வாழ்க்கையே உங்களுக்காகத்தான், மக்களுக்காகத்தான், நான் இங்கு வந்திருப்பதே உங்கள் துயரங்களைத் துரத்தத்தான், உங்கள் கண்களில் கண்ணீர் வர விட மாட்டேன் என்று மக்கள் மனங்களைக் கொள்ளையடிக்கும் வகையில் பேசியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com