அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: ராமர் - சீதைக்கும் அழைப்பு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க, ராமாயணம் தொடரில் ராமர் - சீதையாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: ராமர் - சீதைக்கும் அழைப்பு
Published on
Updated on
1 min read


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க, ராமாயணம் தொடரில் ராமர் - சீதையாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 1980 ஆம் ஆண்டு காலத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணத்தில் ராமர் - சீதையாக நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் அருண் கோவில் - நடிகை தீபிகா சிக்லியா ஆகியோருக்கும் கோயில் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூா்த்த காலத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது.

இதுதொடா்பாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறியதாவது:

அயோத்தி ராமா் கோயிலில் ஜனவரி 22-ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என்றாா்.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமா் கோயிலில் ஜனவரி 23-ஆம் தேதிமுதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com