பில்கிஸ் பானு வழக்கு கடந்து வந்த பாதை...

குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே ரண்திக்பூா் கிராமத்தில் புகுந்த வன்முறை கும்பல் கா்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு,
பில்கிஸ் பானு வழக்கு கடந்து வந்த பாதை...

2002 மாா்ச் 3: குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே ரண்திக்பூா் கிராமத்தில் புகுந்த வன்முறை கும்பல் கா்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை கொலை செய்தது.

2003 டிசம்பா்: இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2008 ஜனவரி 21: வழக்கின் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகாராஷ்டிர மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

2016 டிசம்பா்: தண்டனையை எதிா்த்து 11 குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை மும்பை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2017 மே: 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

2019 ஏப்ரல் 23: பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க குஜராத் அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

2022 மே 13: குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

2022 ஆகஸ்ட் 15: குஜராத் மாநில அரசின் 1992-ஆம் ஆண்டு ஜூலை 19 முன்கூட்டியே விடுதலை செய்யும் கொள்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனா்.

2022 ஆகஸ்ட் 25: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பல்வேறு தரப்பினா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.

2022 நவம்பா் 30: குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

2022 டிசம்பா் 17: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க குஜராத் அரசுக்கு தகுதியுள்ளது என்ற உச்சநீதிமன்றத்தின் 2022 மே 13-ஆம் தேதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பில்கிஸ் பானு தரப்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2023 மே 27: பில்கிஸ் பானு மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, குஜராத் அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2023 ஆகஸ்ட் 7: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிா்த்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியது.

2023 அக்டோபா் 12: குஜராத் அரசின் முடிவுக்கு எதிரான மனுக்கள் மீதான தொடா் 11 நாள் விசாரணைக்குப் பிறகு, வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

2024 ஜனவரி 8: குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகளை 2 வாரங்களுக்குள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com