கோட்சேவைக் கொண்டாடுபவர்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கக்கூடாது!: ஜெய்ராம் ரமேஷ்

கோட்சேவைக் கொண்டாடுபவர்களை இந்த நாட்டின் கொள்கைகளை வரையறுக்க அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 
ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவைக் கொண்டாடுபவர்களை இந்த நாட்டின் கொள்கைகளை வரையறுக்க அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று (ஜன.30) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஜெய்ராம், 'மகாத்மா காந்தியை தவிர்த்த மற்றும் நிராகரித்தவர்களின் கொள்கைகளுக்கு எதிரான நமது போர் தொடர்கிறது.' எனப் பதிவிட்டுள்ளார். 

'மகாத்மா காந்தி கொல்லப்பட்டிருக்கலாம், ஆனால் அவருடைய அமைதி, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் கோடிக்கணக்கான இந்தியர்கள் இங்கு உள்ளனர்' என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிர்ஸ் தலைவருமான பி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com