ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் முதல்வராக உள்ளார்: நிஷிகாந்த் துபே

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் முதல்வராக்கப்பட உள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறினார். 
நிஷிகாந்த் துபே (கோப்புப்படம்)
நிஷிகாந்த் துபே (கோப்புப்படம்)

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் முதல்வராக்கப்பட உள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறினார். 

மேலும் அவர் தலைமறைவாக இருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரன் எவ்வாறு மாநில மக்களைப் பாதுகாப்பார் என்று கேள்வி எழுப்பினார்.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, “முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளாமல் தப்பியோடுகிறார். அவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் அவமானங்களைச் சந்தித்து வருகிறார். அவரால் எப்படி மாநில மக்களைப் பாதுகாக்க முடியும்?

ஹேமந்த் சோரன் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை தலைநகர் ராஞ்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, அவரது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பதிலளித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “முதல்வர் தனிப்பட்ட வேலைகளுக்காக தில்லி சென்றுள்ளார். அவர் விரைவில் திரும்பி வருவார். ஜன.31ஆம் தேதி விசாரணையை எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளார்.

விசாரணைக்கான இடம் மற்றும் நேரத்தைக் குறிப்பிடுமாறு அமலாக்கத்துறை கேட்டது. அதன்படி இடம் மற்றும் நேரத்தைக் கூறியுள்ளோம். முதல்வர் இல்லத்தில் மதியம் 1 மணிக்கு ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜகவினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com