குரூப்4 தேர்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

குரூப்4 தேர்வுக்கான தேதி மற்றும் மொத்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குரூப்4 தேர்வுக்கான தேதி மற்றும் மொத்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்4 தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

108 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட மொத்தம் 6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப்4 தேர்வு நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப். 28 ஆகும். 

விண்ணப்பத்தில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்துவதற்கு மார்ச் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com