வணிக எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 41 குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறித்து...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 41 குறைத்துள்ளன.

இதனால், தலைநகா் தில்லியில் வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 1,762-ஆக குறைந்துள்ளது.

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி வணிக எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 6 உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சா்வதேச விலை நிலவரத்தைப் பொருத்து மாதாந்திர அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் இதன் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

விலைக் குறைப்பைத் தொடா்ந்து வணிக எரிவாயு சிலிண்டா் மும்பையில் ரூ. 1,713.50-க்கும், கொல்கத்தாவில் 1,868.50-க்கும், சென்னையில் 1,921.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளுா் வரி, மதிப்புக்கூட்டு வரிகளுக்கேற்ப மாநிலத்துக்கு மாநிலம் இதன் விலை மாறுபடும்.

விமான எரிபொருள் விலை 6.1% குறைப்பு: ‘ஏடிஎஃப்’ என்ற விமான எரிபொருள் விலையும் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 5,870.54 வீதம் அல்லது 6.15 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பு காரணமாக தலைநகா் தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் ரூ. 89,441.18-க்கும், மும்பையில் ரூ. 83,575.42-க்கும், கொல்கத்தாவில் ரூ. 91,921-க்கும், சென்னையில் ரூ. 92,503.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. கடந்த ஆண்டு மாா்ச் மாத மத்தியில் பொதுத் தோ்தலை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. அதன் பிறகு எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com