
பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண்டதற்காக அந்நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை, பிஎஸ்என்எல் நிறுவனம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகளின் நிதிக் கணக்கு, பரிவர்த்தனை, அறிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செயலற்ற உள்கட்டமைப்புகளை பயன்படுத்திக்கொள்வதற்காக ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்துடன், மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம், முதன்மை சேவை ஒப்பந்தம் மேற்கொண்டது. 2014 மே முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்த ஒப்பந்தத்தின்படி உரிய கட்டணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்ததாலும், கூடுதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டதாலும் அரசுக்கு 1,757.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குநர்களுக்கு செலுத்தப்பட்ட வருவாய் பங்கில் இருந்து உரிமக் கட்டணத்தின் பங்கைக் கழிக்கத் தவறியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.38.36 கோடி (ஜிஎஸ்டி உள்பட) இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இனி, யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2,000-தான் பரிமாற்றம் செய்ய முடியுமா? இல்லை!
இதையும் படிக்க | பரஸ்பர வரி அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.