நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
Published on
Updated on
1 min read

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என்ற பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு, பல்கலைக்கழகத்தின் 400 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்தது.

இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக உகாதி நாளன்று நிலம் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினரும், நிர்வாகமும் தங்களுக்கு துரோகம் இழைத்ததாக பல்கலை மாணவர் சங்கம் குற்றம் சாட்டினர்.

பல்கலை வளாகத்தில் மாணவர்களின் நடமாட்டத்திற்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் மாணவர்கள் வகுப்பறைகளைப் புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்தவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

பல்கலை ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் இணைந்த நிலையில் நிர்வாகம் மௌனம் காத்தனர். மேலும், நில எடுப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

நிலம் பல்கலைக்கழகத்தின் கீழ் பதிவு செய்யப்படும் என்ற எழுத்துப்பூர்வ உத்தரவாதம், காவல்துறை அதிகாரிகளை பல்கலை வளாகத்திலிருந்து அகற்றுதல், நிலம் தொடர்பான ஆவணங்களில் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்களும், ஆசிரியர்களும் போராட்டம் மற்றும் பேரணி நடத்திய நிலையில் காவல்துறையினர் லத்தியால் தாக்கியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது, போராட்டத்தைக் கலைப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 10 பேர் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் பல மாணவர்கள் இணைந்துள்ளனர்.

மேலும், பல்கலை வளாகத்தில் அனைத்து ஜேசிபி வாகனங்களையும் வெளியேற்றி மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால், அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com