கேரள முதல்வரின் மகளுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு அனுமதி!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு எதிரான வழக்குக்கு அனுமதி..
பினராயி விஜயன், வீணா
பினராயி விஜயன், வீணா
Published on
Updated on
1 min read

மோசடி வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2017 முதல் 2020 வரை வீணாவுக்குச் சொந்தமான ஐடி நிறுவனத்துக்கு மொத்தமாக ரூ.1.72 கோடியை சிஎம்ஆா்எல் நிறுவனம் வழங்கியதாக மலையாள பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. ஹாா்டுவோ் மட்டும் பிற ஆலோசனைகள் தொடா்பான சேவைகளை வழங்குவதற்காக ஐடி நிறுவனத்துடன் சிஎம்ஆா்எல் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எந்தவொரு சேவையும் வழங்கப்படாமல் வீணாவின் ஐடி நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் சிஎம்ஆா்எல் நிறுவனம் பணம் வழங்கியதாக அந்த செய்தியில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனடிப்படையில், கேரள உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பினராயி விஜயன் மற்றும் அவரது மகளுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதனிடையே, இந்த மோசடி புகார் குறித்து மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறையின் கீழ் இயங்கும் தீவிர மோசடி விசாரணை பிரிவு, விசாரணை நடத்தியுள்ளது.

மேலும், கொச்சியில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது.

அந்த குற்றப்பத்திரிகையில், வீணாவுக்கு சொந்தமான நிறுவனம் ரூ. 2.7 கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனச் சட்டப் பிரிவுகள் 447, 448 இன் கீழ் வீணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மோசடி செய்த தொகையைவிட மூன்று மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள வீணா உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்குப்பதிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

குற்றச்சாட்டுக்குள்ளான வீணா, கேரள முதல்வரின் மகள் மட்டுமின்றி சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸின் மனைவியும் ஆவார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் மகள் மீதான குற்றச்சாட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com