கனடா: கிருஷ்ணர் கோயில் மீது தாக்குதல்

கனடாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலைச் சேதப்படுத்தியார்களை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.
ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம்
ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம்FB | Sri Krishna Brundavana Canada
Published on
Updated on
1 min read

கனடாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலைச் சேதப்படுத்தியார்களை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.

கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோயிலை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேகிக்கப்படும் இரு ஆண்கள் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக, அருகிலிருந்த மதுக்கூடத்துக்கு சென்றது தெரிய வந்தது. அவர்கள் கோயிலின் நுழைவாயிலில் சேதம் ஏற்படுத்தினர்.

இருப்பினும், அவர்கள் முகத்தை மறைக்கும்வகையிலான ஹூடி (Hoodie) அணிந்திருந்ததால், அவர்களின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து, ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு குற்றத்துடன் செயல்படும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் ஹிந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா காவல்துறை தெரிவித்தது.

மேலும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஹிந்து கனேடிய அறக்கட்டளை, ஹிந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல், பல்வேறு சமூகங்களின் நல்லிணக்கத்தின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com