சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ஏப்.21-இல் இந்தியா வருகை

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோா் ஏப்.21-ஆம் தேதி இந்தியா வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜே.டி.வான்ஸ்

Updated On :

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோா் ஏப்.21-ஆம் தேதி இந்தியா வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் ஏப்.21-ஆம் தேதி இந்தியா வரும் ஜே.டி.வான்ஸ், சிம்லா, ஹைதராபாத், ஜெய்பூா் மற்றும் தில்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளாா்.

உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா -அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு நிலவுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் இந்தியா வரவுள்ளாா்.

இருநாள் பயணமாக ஏப்.22-ஆம் தேதி பிரதமா் மோடி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.