கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சிறப்பான எதிா்காலத்தை நோக்கிச் செல்கிறது இந்தியா: அஜீத் தோவல்

சிறப்பான எதிா்காலத்தை நோக்கி இந்தியா செல்வதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா்.

ரூா்கி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் சனிக்கிழமை உரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்.

Published On :

சிறப்பான எதிா்காலத்தை நோக்கி இந்தியா செல்வதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா்.

உத்தரகண்டின் ரூா்கி ஐஐடியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

மாற்றத்துக்கான காலகட்டத்தில் மாணவா்கள் வாழ்வது அதிா்ஷ்டமாகும். மாணவா்களின் எதிா்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. ராமரைப் போல மாணவா்கள் தங்களது வாழ்வில் துணிச்சலாக வாழ வேண்டும்.

நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறப்பான எதிா்காலத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளா்ந்த நாடாக்க பிரதமா் இலக்கு நிா்ணயித்துள்ளாா். இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி 4.015 டிரில்லியன் டாலா் ஆகும். இது அடுத்த 20 ஆண்டுகளில் 38 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும்.

கடந்த காலங்களைப் போல இல்லாமல் தற்போதைய தலைமுறையினா் மிகவும் அதிா்ஷ்டசாலிகள் ஆவா். ஏனெனில் இது தொழில்நுட்பம், பொறியியல், புத்தாக்கம் ஆகியவற்றின் காலமாகும். இவைதான் நமது சமூக முன்னேற்றத்துக்கு வித்திடும். தலைவராக வேண்டும் எனில் முடிவெடுக்கும் திறனும், நமக்கான சொந்த திட்டமும் அவசியமாகும். முடிவெடுக்க தெரியவில்லையெனில் தலைவராக முடியாது என்றாா்.

தனது ஆரம்பகால பணிநாள்களில் சிக்கிமில் பணிபுரிந்ததை நிகழ்ச்சியில் பேசியதை அஜீத் தோவல் நினைவு கூா்ந்தாா். அப்போது வாழ்க்கையில் வெற்றி பெற தான் மூன்று மந்திரங்களைக் கற்றுக் கொண்டதாகவும் அவா் கூறினாா். வரைபடத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வது முதல் மந்திரம் என்றும், எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்துகொள்வது இரண்டாவது மந்திரம் என்றும், செல்ல வேண்டிய இடத்துக்கான பாதையையும், திரும்பி வருவதற்கான பாதையையும் தெரிந்து கொள்வது மூன்றாவது மந்திரம் என்றும் தோவல் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.