இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!

சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு பற்றி...

ajit doval

இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல், சீன துணை அதிபர் ஹான் ஜெங் - Photo: Embassy

Published On :

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2020-ல் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக் கொண்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களாக எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, படைகள் திரும்பப் பெறப்பட்டன.

இந்த நிலையில், இந்தியா - சீனா எல்லை பிரச்னை தொடர்பாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியான அஜித் தோவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்துக்கு முன்னதாக சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை நேரில் சந்தித்து அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது குறித்தும், பொருளாதாரம், அரசியல் மற்றும் பன்முகத் தளங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற செப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு தில்லியில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அஜித் தோவலின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Summary

Indian National Security Advisor Ajit Doval met Chinese Vice President Han Zheng

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.