கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருதக் கூடாது: அஜீத் தோவல்!

இந்தியாவின் பெருந்தன்மையையும் சகிப்புத்தன்மையையும் பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தெரிவித்துள்ளார்.

News image

அஜித் தோவல்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

இந்தியாவின் பெருந்தன்மையையும் சகிப்புத்தன்மையையும் பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக டிஸ்கவரி ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக நமது ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை எடுத்தது. இந்த 88 மணிநேர ராணுவ நடவடிக்கையின் நோக்கம் எதிரிகளின் முகாம்களை குறிப்பாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களின் முகாம்களை அழிப்பதே ஆகும். எதிரி முகாம்களை அழிப்பதையே நமது ராணுவ நடவடிக்கையின் குறிக்கோளாக நிர்ணயித்தோம்.

இதன்மூலம் உலகுக்கு நாம் அளித்த செய்தி தெளிவாக இருந்தது. இந்தியாவின் பெருந்தன்மையையும் சகிப்புத்தன்மையையும் பலவீனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே அது. இந்தியாவால் ஆபத்தான முடிவுகளை எடுக்க முடியும். விளைவுகளைக் கருதாமல் இந்தியாவில் கடினமாகத் தாக்க முடியும்.

பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி, சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இத்தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் அவர் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு தாயகம் திரும்ப வேண்டியிருந்தது.

பிரதமர் நாடுதிரும்பினார். அவரை வரவேற்க வெளியுறவுச் செயலாளர் தில்லி விமான நிலையத்துக்கு சென்றார். அதையடுத்து விமான நிலையத்திலேயே நாங்கள் ஒரு சந்திப்பை நடத்தினோம். பஹல்காம் தாக்குதலை நடத்தியது யார் என்பதே பிரதமர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியாகும். உளவுத்துறையின் சிறப்பான பணி காரணமாக பஹல்காம் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக நம்மால் விரைவிலேயே ஒரு முடிவுக்கு வரமுடிந்தது.

ஒரு பணியைத் தொடங்கினால் நம்மால் அதன் எல்லை வரை செல்ல முடியும். ஒரு நாட்டுக்கு தனது இறையாண்மையைக் காப்பது அவசியமாகும். அதற்கு எந்த எல்லையும் இல்ல. கடைசி சொட்டு ரத்தம் வரை நாம் போராடுகிறோம்.

"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடரும் என்று நம் பிரதமர் கூறும்போது, கடைசி பயங்கரவாதி ஒழித்துக்கட்டப்படும் வரை பயங்கரவாதத்துக்கு எதிரான நமது போராட்டம் நீடிக்கும் என்பதே அவரது நோக்கமாகும் என்று அஜீத் தோவல் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு 22ஆம் தேதி கொடூர தாக்குதலை நடத்தினர். இதற்கு பழிதீர்க்கும் வகையில் நமது ராணுவம் மே 7ஆம் தேதி "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது. அப்போது பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இதை எதிர்த்து பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த முயன்றது. அத்தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா கடந்த ஆண்டு மே 10ஆம் தேதி நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.