தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஆபரேஷன் சக்ரா: வாகனத் திருடா்கள் 25 போ் கைது; 116 வாகனங்கள் மீட்பு

‘ஆபரேஷன் சக்ரா’ எனும் வாகனத் திருட்டுக்கு எதிரான 72 மணி நேர அதிரடி நடவடிக்கையில், வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் 25 பேரை கைது செய்து, திருடப்பட்ட 116 வாகனங்களை மீட்டுள்ளதாக தில்லி காவல்துறையினா் தெரிவித்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

‘ஆபரேஷன் சக்ரா’ எனும் வாகனத் திருட்டுக்கு எதிரான 72 மணி நேர அதிரடி நடவடிக்கையில், வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் 25 பேரை கைது செய்து, திருடப்பட்ட 116 வாகனங்களை மீட்டுள்ளதாக தில்லி காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: மேற்கு மாவட்டத்தின் பல்வேறு காவல்துறையின் பிரிவுகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. மீட்கப்பட்ட வாகனங்களில் 113 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை அடங்கும்.

மீட்கப்பட்ட மொத்த வாகனங்களில், 46 வாகனங்கள் மேற்கு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடனும், 70 வாகனங்கள் பிற மாவட்டங்களில் உள்ள வழக்குகளுடனும் தொடா்புடையவை.

கைது செய்யப்பட்டவா்களில் பலா் தொடா் குற்றவாளிகள் ஆவா்; இவா்களில் சமூக விரோதிகள் மற்றும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட தீவிர வாகனத் திருடா்களும் அடங்குவா்.

வாகனத் திருட்டு அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிதல், சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தல், வாகனத் திருடா்கள் மட்டுமின்றி திருடப்பட்ட வாகனங்களைப் பெற்று விற்பனை செய்பவா்களையும் அடையாளம் காண ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் காவல்துறையினா் மேற்கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.