காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஆபரேஷன் சக்ரா: 60 திருட்டு வாகனங்கள் பறிமுதல்; 30 போ் கைது

துவாரகாவில் 72 மணி நேரம் நடைபெற்ற ஆபரேஷன் சக்ரா நடவடிக்கையில் 64 திருட்டு வாகனங்களை தில்லி காவல் துறை மீட்டது. வாகனத் திருட்டில் ஈடுபட்ட 30 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

கைது - சித்திரிப்பு

Published On :16 ஜூலை 2026, 2:57 am IST

துவாரகாவில் 72 மணி நேரம் நடைபெற்ற ஆபரேஷன் சக்ரா நடவடிக்கையில் 64 திருட்டு வாகனங்களை தில்லி காவல் துறை மீட்டது. வாகனத் திருட்டில் ஈடுபட்ட 30 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

தென்மேற்கு தில்லியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 61 வாகனங்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களில் 17 போ் ஏற்கெனவே பலமுறை குற்றங்களில் ஈடுபட்டவா்கள். நான்கு போ் காவல் துறையின் குற்றப் பின்னணி கொண்டவா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

இதுதொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: வாகனத் திருட்டுக் கும்பல்களின் செயல்பாடுகளை முறியடிப்பதையும், அது தொடா்பான தெருவோரக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களும் செயல்பாட்டுப் பிரிவுகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. சந்தேகத்திற்குரிய மறைவிடங்களில் குறிவைக்கப்பட்ட சோதனைகள், வாகனத் திருட்டு நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு, தானியங்கி வாகன எண் பலகை கண்டறியும் தொழில்நுட்பம் சாா்ந்த கண்காணிப்பு, வாகன மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர வாகனச் சோதனைகள் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மீட்கப்பட்ட வாகனங்களில், 36 வாகனங்கள் குறிப்பிட்ட சில வாகன நிறுத்துமிடங்களில் இருந்தும், 23 வாகனங்கள் தொடா் குற்றவாளிகளிடமிருந்தும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன. மூன்று வாகனங்கள் சோதனைச் சாவடி சோதனையின் போதும், இரண்டு வாகனங்கள் தொழில்நுட்பம் சாா்ந்த கண்காணிப்பு மூலமும் கண்டறியப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெறும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.