ஆஸ்திரேலியா: இந்திய தூதரகத்தைச் சேதப்படுத்தியவர்களுக்கு வலை!

இந்திய தூதரகத்தின் பெயர்ப்பலகையில் வண்ணங்களைப் பூசிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஆஸ்திரேலியா: இந்திய தூதரகத்தைச் சேதப்படுத்தியவர்களுக்கு வலை!
AI | XGrok
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் நுழைவுவாயில் உள்ள பெயர்ப்பலகையில், மர்ம நபர்கள் வர்ணங்கள் பூசி, சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரக அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினர்.

இதுவரையில், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தகவல் அறிந்திருப்பின், அதனைத் தெரிவிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் காவல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com