
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திங்கள்கிழமை காலை முதல் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதியம் வரை மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்துவோருக்கு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை வசதி செய்து தரும் என்றும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் வந்து செல்ல பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அம்பேத்கர் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், அம்பேத்கரின் கொள்கை, லட்சியங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வலிமையை அளிக்கும்.
அம்பேத்கரின் உத்வேகத்தால் நாடு சமூக நீதிக்கான கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.