புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை! சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

News image

அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Updated On :14 ஏப்ரல் 2025, 5:08 am

DIN

சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றார்.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவா் விடுதி வளாகத்தில் ரூ. 44 கோடியே 50 லட்சத்தில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவா்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவா்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.