அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது!
இன்று காலை முதல் வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.


2025-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்கு 52 நாள் புனித யாத்திரை ஜூலை 3 அன்று தொடங்கி ரக்ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடையும் என்று அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமர்நாத் குகையை அடைய இரண்டு மலையேற்றப் பாதைகள் உள்ளன. பால்டால் வழியாக குறுகிற பாதை, ஸ்ரீநகர் வழியாகச் செல்லும் பாரம்பரிய வழிகள் என இரண்டு வழியாக பக்தர்கள் செல்கிறனர். இந்த இரண்டு வழிகளிலும் முக்கியமாக இடங்களில் பக்தர்களுக்கு உதவுவதற்காக வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் 540 கிளைகளில் முன்பதிவுக்காக நியமித்துள்ளது. முன்பதிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 13 வயதுக்குள்பட்டவர்கள் இருக்கக்கூடாது. மேலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணிகளும் பதிவு செய்ய அனுமதியில்லை.
யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், இன்று காலை முதல் ரெஹாரி கிளையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் திரளானோர் பதிவு செய்து வருகின்றனர். யாத்திரை மேற்கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் பதிவு செய்வது அவசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...