
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்வதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களில் தலையிடுவதன் மூலம் நீதிமன்றம் தனது எல்லைகளை மீறுகிறது.
உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றத்தை மூட வேண்டும். இது அரசியலமைப்பை மீண்டும் எழுதுவதாகும். மத்திய அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடன் மட்டுமே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரமாக இருக்கும் குடியரசுத் தலைவருக்குக்கூட நீதிமன்றம் உத்தரவுகளை வழங்குகிறது. ஒரு காலக்கெடுவுக்குள் குறிப்பிடப்பட்ட ஒரு சட்டத்தை தீர்மானிக்க குடியரசுத் தலைவர் கட்டாயப்படுத்தப்படுகிறார்.
இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று தெரிவித்தார்.
இருப்பினும், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் பேச்சு, அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அவரது கருத்துகளை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என்றும் அக்கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா நிராகரித்து விட்டார்.
இதையும் படிக்க: போரிட்டால்தான் அச்சுறுத்தல் இருக்காது: இஸ்ரேல் பிரதமர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.